Kavithai

Kavithai
  • Android 4.1 Android
  • Version: 1.0.3
  • 13 MB
Download

Updated to version 1.0.3!


app Name Kavithai
Version 1.0.3
Developer Happy Coders Private limited
OS Android 4.1
Updated 2023-10-28

Download Kavithai app Android

கவிதையைக் கலையின் அரசி என்பார்கள். கவிதைக்கலை என்பது நுண்கலைகளுள் கவின்கலை. கவிதைக்கலையைக் கல்லாக்கலை என்றும் கூறுவர். இசை, ஓவியம், சிற்பம் போன்ற பிற கலைகள் அனைத்துயிர்களையும் தம்மில் சேர்த்து இன்புறுகின்றன. ஆனால் கவிதைக்கலையானது மனிதர்ளுக்கு மட்டுமே சொந்தமானது. மனிதனால் மட்டுமே அனுபவிப்பதற்குரியது.

"கவிஞர் தம் உள்ளத்தில் தோன்றிய அரிய உண்மைகளை இன்ப வடிவமாகத் தெளிந்த மொழியில் வெளியிடுவது கவிதை" என்பது கவிமணியின் கருத்தினால் புலப்படும். ஒரு கவிஞன் எழுதிய கவிதையை எண்ணும் போதும், அதை நூல்களில் காணும்போதும் இரண்டு முக்கிய அம்சங்கள் புலப்படுகின்றன. ஒன்று அதன் வடிவம் மற்றது அதன் பொருள். வடிவம் என்பது செற்களால் அமைவது. கருத்தைத் தாங்கி நிற்பது. வடிவம் புறத்திலிருந்து கவிதையில் வந்து பொருந்தும் பண்பன்று. உணர்ச்சி அல்லது அனுபவம் கவிஞன் உள்ளத்தில் கவிதை உருக்கொள்ளும்போது வடிவை நிச்சயிக்கின்றன. கவிதையின் பொருள், வடிவம் ஆகிய இரண்டிலும் பொருளே சிறப்புடையது. பொருளுக்கு ஏற்ற வடிவம் அமைவதே கவிதையின் சிறப்புக்குக் காரணமாகும். அப்படியல்லாது வடிவத்திற்கு முதன்மையிடம் அளிக்கபட்டால் பொருட்சிறப்புக் குன்றில் கவிதை பொலிவை இழக்கும். கவிதையில், சரியான வார்த்தைகள் சரியான இடத்தில் அமைய வேண்டும். கவிஞன் வார்த்தைகளை எடுத்துக் கோர்ப்பதில்லை. உணர்ச்சியின் பெருக்கு, சரியான வார்த்தைகளைச் சரியான இடத்தில் கொண்டு கொட்டுகிறது.

ஒரு மொழியின் பழைமையையும் பெருமையையும் தெரிந்துகொள்ள அதன் இலக்கியங்களைப் படித்தால் போதும். தமிழ் மொழியின் செழுமையினை அறிய இந்தக் கவிதை தொகுப்பு ஒரு சிறிய உதாரணம். இந்தப் பக்கத்தில் உள்ள கவிதைகள் தமிழ் மொழியின் சிறப்பினை விவரிக்கக்கூடியவை. இங்கே வாழ்வின் வெவ்வேறு கோணத்துக்கும் கவிதைகள் உள்ளன. படித்து ரசித்து உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள்.
  • 5
5 (19)

Additional Information:
  • Updated
  • Price$0
  • Installs 100+
  • Rated for 12+ years
Good speed and no viruses!

On our site you can easily download All Apps And Games without registration and send SMS!

Related